திருமணத்தை மீறிய உறவால்..அண்ணனை வெட்டி கூறு போட்ட தம்பி- ராஜபாளையத்தில் பயங்கரம்

Update: 2025-01-27 02:37 GMT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஓடாபட்டியில், மனைவி யாருடன் வாழ்வது என எழுந்த தகராறில், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கு ராம்குமார் - சந்தன ஈஸ்வரி தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்த சந்தன ஈஸ்வரி, ராம்குமாருக்கு தம்பி முறையான காளிராஜ் என்பவரோடு, திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ராம்குமாருக்கும் காளிராஜுக்கும் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், காளிராஜ், முதல் கணவரான ராம்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதைத்தொடர்ந்து, ராஜபாளையம் வடக்கு போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் காளிராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்