Railway Gate | ``எங்க மேல ஏத்திட்டு எடுங்க பாப்போம்'' - சென்னை அருகே ரயிலை நிறுத்தி அலறவிட்ட மக்கள்

Update: 2025-08-07 03:35 GMT

ரயில்வே கேட் திறக்க தாமதம் - ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள்

மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரPOயில்வே கேட் திறக்க கால தாமதம் ஆனதால் பொது மக்கள் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டில் திடீரென ஏற்பட்ட சிகனல் கோளாறால் சுமார் இரண்டு மணி நேரம் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென தண்டவாளப்பகுதிக்கு நடுவே நின்று ரயிலை மறித்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்