Radio | Collector | "ஐயா,என் ரேடியோவ கண்டுபிடிச்சி தாங்க.." கலெக்டர் ஆபீசில் 95 வயது மூதாட்டி புகார்

Radio | Collector | "ஐயா,என் ரேடியோவ கண்டுபிடிச்சி தாங்க.." கலெக்டர் ஆபீசில் 95 வயது மூதாட்டி புகார்;

Update: 2025-11-04 12:41 GMT

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன ரேடியோ பெட்டியை கண்டுபிடித்து தரக்கோரி 95 வயது மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்த ஆதிலட்சுமியின் ரேடியோ பெட்டியை கடந்த ஒரு வருடத்திற்கு முன் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் காவல்நிலையத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய மூதாட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்