Rabies "நாயின் நாக்கோ, நகமோ பட்டாலே நாய் போல் மாறி உயிர் போகும்" - குலைநடுங்கவிடும் அதிர்ச்சி உண்மை

Update: 2025-09-25 11:59 GMT

"நாயின் நாக்கோ, நகமோ பட்டாலே நாய் போல் மாறி உயிர் போகும்" - குலைநடுங்கவிடும் அதிர்ச்சி உண்மை

நாய் நகத்தால் கீறியதை அலட்சியமாக விட்டவர்களும் ரேபிஸ் நோய்க்கு உயிரிழக்கும் துயரம் குறித்து அலசும் ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

இன்று நாய் தொல்லை, நாட்டில் தீர்க்க முடியாத பெரும் தொல்லையாக துரத்துகிறது.

தெருவில் நடக்கும் போது, எந்த மூலையில் இருந்து நாய் வருமோ? என்று மக்கள் அச்சத்தோடு நடக்கும் சூழலே நிலவுகிறது. இதனால் நாடு முழுவதும் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை வலுத்து வருகிறது.

நாட்டில் நாய் கடி சம்பவங்கள் அதிகரிப்பது போல, ரேபிஸ் நோயால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ்-க்கு சிகிச்சையளிக்க மருந்து இல்லை. ரேபிஸ் பாதித்தால் உயிரிழப்பு நிச்சயம் என்பதால், நாய் கடித்த பிறகு கடித்த இடத்தை சோப்பால் கழுவிவிட்டு, தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே தற்காப்பாக இருக்கிறது.

தெரு நாயாக இருந்தாலும் சரி, வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்தாலும் சரி, கடித்துவிட்டால் தவறாமல் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்