கல்குவாரி விபத்து குவாரி உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த மாவட்ட ஆட்சியர்
- சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை தனியார் கல் குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி நிகழ்ந்த விபத்தில் புலம் பெயர் தொழிலாளி உட்பட 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- இதுதொடர்பாக குவாரி உரிமையாளரின் சகோதரர் கமலநாதன், குவாரி பொறுப்பாளர் கலையரசன், மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். குவாரி உரிமையாளர் மேகவர்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.
- கல் குவாரி உரிமத்தை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். உரிமம் காலாவதியான பிறகும், கல்குவாரி கடந்த எட்டு மாதங்களாக இயங்கியது தெரிய வந்த நிலையில்,
- கனிமவளத்துறை ஆர்.ஐ வினோத்குமார், மல்லாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிங்கம்புணரி வட்டாட்சியர் பரிமளாவை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.