சென்னை பொழிச்சலூரில் குடும்பதராறு காரணமாக
ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மனைவி காணவில்லை என போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி வகித்து வருபவர் ஜோசப்.இவரது மனைவி டெய்சி ராணி வயது 41 .
தனது மகனை சரியாக படிக்க சொல்லியதால் டெய்சிக்கும் மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் மனைவி பொழிச்சலூர் பகுதியில் ஆட்டோ ஒன்றில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளுடன் கணவர் ஜோசப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.