கோழியை விழுங்கிய மலைப்பாம்பு - பிடிபட்ட அடுத்த நொடி செய்த அதிர்ச்சி செயல்
தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் உள்ள தென்மலை அருகே, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பு கோழியை விழுங்கியது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மலைப்பாம்பை மீட்டனர். அப்போது, பாம்பு தான் விழுங்கியிருந்த கோழியை கக்கியது. பின்னர், அந்த மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.