திருப்பூரில் சாலையில் அடிபட்ட நாய்குட்டிக்கு கால்நடை மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் நாய்க்குட்டியை "உங்களுடன் ஸ்டாலின்" முகாமிற்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாலையில் அடிபட்ட தெரு நாய்க்குட்டியை பல்லடத்தை சேர்ந்த நந்தகோபால் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய சமூக ஆர்வலர்கள் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, அங்கு நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். இதையடுத்து அந்த சமூக ஆர்வலர்கள், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பங்கேற்ற மருத்துவர்களிடம் நாய்க்குட்டியை ஒப்படைத்தனர். நாய்க்குட்டியை பெற்றுக் கொண்ட மருத்துவர்கள்,உரிய சிகிச்சைக்கு பிறகு நாய்க்குட்டியை ஒப்படைப்பதாக கூறினர்.