Pudukkottai | Bus Driver | இறப்பதற்கு முன் கடவுளாக மாறி மற்றவர்களை காப்பாற்றிய டிரைவர்
மதுரையிலிருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், தன் உயிர் போகும் முன், பல உயிர்களை அவர் காப்பாற்றினார். புதுக்கோட்டை லேனா விளக்கு டோல்கேட் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் பாலமுருகனுக்கு திடீரென நெஞ்சுவலி எற்பட்டது. வலியிலும் சுதாரித்த ஒட்டுநர், பேருந்தை ஓரமாக நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் பாலமுருகன், பரிதாபமாக உயிரிழந்தார்.