Nilgiri | Bus Stand | பேருந்து நிலையத்தில் `கப்பல்’ விட்ட பொதுமக்கள்
குளம் போல மாறிய பேருந்து நிலையம் - போராட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் மழைநீர் தேக்கத்தை சரிசெய்யக் கோரி, மக்கள் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019ம் ஆண்டு, புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை அது முழுமை பெறவில்லை. தற்போது, பேருந்து நிலையத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலனும் தர்ணாவில் கலந்து கொண்டார்.