அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே நாகம்பந்தல் கிராமத்தில் தார் சாலையை காணவில்லை என்று பொதுமக்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 10 ஆண்டுகளாக கிராம நுழைவு சாலை போடவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதியினர் குற்றம் சாட்டினர். அத்துடன் இந்த கிராமம் அரியலூர், கடலூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ளதால் இருமாவட்ட அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது.