சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்..பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவுக்கு வந்தது
தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலை புதூர் பாண்டியாபுரம் அருகே செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி நிர்வாகம் முறையாக சாலை பராமரிப்பு மற்றும் மரக்கன்றுகள் நட்டு பாரமரிப்பு செய்யாமல் சுங்ககட்டணம் மட்டும் வாகங்களுக்கு வசூலித்து வருவதாக தூத்துக்குடியை சார்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஸ்ணண் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தொடுத்த மனுவில் மதுரை உயர் நீதி மன்ற கிளை முறையாக பராமரிப்பு மேற்கொள்ளும் வரை தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள சுங்கசாவடியில் வாகங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என நேற்று அறிவித்திருந்தது இந்நிலையில் மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்தரவை மீறி சுங்கசாவடியில் தொடர்ந்து வசூலித்து வருவதால் லாரி ஓட்டுனர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள்,லாரி சங்கத்தினர் சுங்கச்சாவடி முன்பு லாரிகளை வரிசையாக நிறுத்தி காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அந்த சுங்கச்சாவடி-யில் ஒரு வழிபாதை மட்டும் காலை முதல் செயல்பட்டு வந்தது இந்நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினாநடத்தினார் அதற்கு சுங்கசாவடி நிர்வாகம் தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் தங்களுக்கு வந்தவுடன் நீதிமன்ற உத்தரவை கடைபிடிப்போம் என்றும் அதுவரை லாரி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம கேட்டுகொண்டதை தொடர்ந்து கடந்த 4-மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.