"தனியார் பள்ளி மூடப்படுவதாக அறிவிப்பு" - பெற்றோர் தலையில் இடியை இறக்கிய மெசேஜ்
"தனியார் பள்ளி மூடப்படுவதாக அறிவிப்பு" - பெற்றோர் தலையில் இடியை இறக்கிய மெசேஜ்
தாம்பரம் அருகே, தனியார் பள்ளி ஒன்று மூடப்படுவதாக அறிவித்த நிலையில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி மூடப்படுவதாக நிர்வாகம் சார்பாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளியின் முன்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பேசிய நிர்வாகம், பள்ளியின் தாளாளருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தொடர்ந்து பள்ளியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது என்றும், இது தொடர்பாக பெற்றோர்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.