ஆசையாக வாங்கிய பைக்.. வீட்டிற்கு ஓட்டிச்செல்லும் வழியில் பேராசிரியை உடல் நசுங்கி பலி
சேலத்தில், புது இ-பைக்கை வீட்டிற்கு ஓட்டிச் சென்ற 26 வயதே ஆன கல்லூரி பேராசிரியை கவி என்பவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகனின் மனைவியான இவர், சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் இ-பைக் வாங்கி இருந்தார். பின்பு, AVR ரவுண்டானா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது, கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், அவர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.