Pratyangira Amman | Krishnagiri District News | பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில் மிளகாய் வத்தல் யாகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில் நடைபெற்ற, ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு பூஜையில் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மிளகாய் வத்தலை பிரம்மாண்ட குண்டத்தில் பக்தர்கள் செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த நிகழ்வில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு, அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்