விழுப்புரம் நகரம் முழுவதும், நடிகர் விஜய் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மீறியதாக கூறி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள கண்டனப் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனைக் கண்டித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது விஜய்க்கு எதிரான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளதால், இரு அணிகளுக்கும் இடையே போஸ்டர் யுத்தம் தீவிரமடைந்துள்ளது. நகரில் பதற்ற நிலை நிலவுவதால், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.