தமிழக அமைச்சரவையில் 2 அமைச்சர்களின் இலாகா மாற்றம்

Update: 2025-05-08 16:24 GMT

தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதி வசமிருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைப்படி, அமைச்சரவை இலாகாவை மாற்றி ஆளுநர் மாளிகை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்