`அடேங்கப்பா இந்த கேம் நல்லா இருக்கே..'வெட்ட வெளியில் கணவன் மனைவி சேர்ந்து விளையாட்டு..
காரைக்கால் அருகே மீனவ கிராமத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன. காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் நடைபெற்ற விழாவில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மனைவியை கணவர் தூக்கிசுமக்கும் போட்டி, கப்ளிங் கேம் போன்றவை பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.