Pondicherry | பெற்ற தாயின் கழுத்தை காய்கறி வெட்டும் கத்தியால் அறுத்து கொன்ற மகன்
புதுச்சேரியில் சொத்து தகறாரில் தாயை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் மற்றும் பேரனை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைச்சாவடி, அன்னை நகரை சேர்ந்த லோகநாயகி என்பவர், மூத்த மகனான ராஜ்குமாருக்கு சொத்தை பிரித்து தராமல் இளைய மகனுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் மது போதையில் இருந்த ராஜ்குமார், காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து பெற்ற தாய் என்றும் பாராமல் கழுத்து அறுத்து கொன்றதாகவும், அவருடன் சேர்ந்து 17 வயது பேரனும் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதில், லோகநாயகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜ்குமாரையும், அவரது 17 வயது மகனையும் போலீசார் கைது செய்தனர்.