Pollachi Leopard | ஊருக்கே உயிர்பயத்தை காட்டிய சிறுத்தை சிக்கியது.. பெருமூச்சு விடும் மக்கள்
பொள்ளாச்சி அருகே கால்நடைகளை கொன்று விவசாயிகளை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் பிடிபட்டது. பாறைமேடு மற்றும் பாசிப்பைத்தான் பாறை கிராமங்களில் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஊர் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, கால்நடைகளை கொன்று அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில், இரும்பு கூண்டுகளை அமைத்தனர். இந்நிலையில் 25 நாட்களுக்கு பிறகு, அம்மன்கோரை பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. மேலும் சிறுத்தையை வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டு வருகிறது.