Pollachi Case | பொள்ளாச்சி வழக்கு விசாரணை - பலமுறை கண்ணீர் விட்ட நீதிபதி நந்தினி தேவி
ஆரம்பம் முதல் முடிவு வரை கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தான், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்தார். பணியிட மாறுதல் பெற்ற போதும், இந்த வழக்கின் தீர்ப்பை கூறுவதற்காகவே கோவை மகளிர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் நடத்த சம்பவத்தை விவரித்ததை கேட்டு நீதிபதி நந்தினிதேவி பலமுறை கண்கலங்கினார்.