மதுரையில் 24 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான காவலரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் தங்கராஜ். இவர் குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1500 பேரிடம் 24 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் லாப தொகையை தராமல் தற்போது காவலர் ரமேஷ் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை பெற்று தரும்படி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.