Train மக்களே உஷார்..! உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ரயிலில் திரும்பிய தம்பதிக்கு நேர்ந்த சோகம்

Update: 2025-05-03 11:31 GMT

ரயிலில் பயணம் செய்த கணவன், மனைவியிடம் திருடப்பட்ட தங்க நகைகளை, சேல​ம் ரயில்வே போலீசார், 1 மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். பெங்களூருவில் பணியாற்றும் சங்கர் தயாளன் - சங்கரி தம்பதி, மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, ரயிலில் பெங்களூரு நோக்கி பயணம் செய்தனர். அப்போது சங்கரி தனது பையில் வைத்திருந்த சுமார் ஆறே கால் சவரன் நகைகள் திருடு போனது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டாராம்பாளையம் பகுதியை சேர்ந்த தஸ்தகீர் பாபு என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்