சிறையில் இருந்த படியே சம்பவம்-கைதி வீட்டில் சிக்கிய பல கோடிகள்..அதிர வைத்த D*rugs - மிரண்ட போலீசார்
இலங்கையில், சிறைக்கைதி ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 28 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குருநாகல் மாவட்டம், கல்கமுவ பகுதியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் 28 கோடி ரூபாய் பணம், 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், வேன் உள்ளிட்ட 2 வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிறையில் இருந்தபடியே, அந்த குற்றவாளி போதைப்பொருள் வணிகத்தை வழிநடத்தி வந்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.