Manipur violence | மணிப்பூரில் கலவரம் செய்த கைகளுக்கு துடைப்பத்தை வழங்கிய போலீஸ்..

Update: 2025-06-12 10:43 GMT

மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபட்டு கைதான நபர்களை போலீசார் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தினர். மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையேயான கலவரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் தலைதூக்கி உள்ளன. கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வரும் பல்வேறு வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 19 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கலவரக்காரர்களை தண்டிப்பதற்கு பதிலாக, அவர்களின் கையில் துடைப்பத்தை கொடுத்து சாலையை தூய்மை செய்யும் தண்டனையை போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்