திருடு போன பைக்கை அரை மணி நேரத்தில்... Chase பண்ணி மீட்ட போலீஸ்

Update: 2025-09-07 07:41 GMT

திருடு போன பைக்கை அரை மணி நேரத்தில்... Chase பண்ணி மீட்ட போலீஸ்

சென்னையில் காணாமல் போன இருசக்கர வாகனத்தை 30 நிமிடத்திற்குள் போலீசார் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 2 நபர்க​ளை பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், வாகனத்தின் உரிமையாளர் குறித்து போலீசார் சோதனை செய்தபோது, அங்கிருந்து இருவரும் தப்பியோடினர். இதுகுறித்து மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கு போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தனது வாகனத்தை காணவில்லை என புகார் அளித்த மெர்சி மெட்டில்டா என்பவரை போலீசார் தொடர்பு கொண்டு, பிடிபட்டது அவரது வாகனம் தானா? என்பதை உறுதி செய்து பின்னர் அவரிடம் ஒப்படைத்தனர். தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றபோது வாகனம் காணாமல் போனதாகவும், காவல்துறையின் துரித நடவடிக்கையால் தனது வாகனம் கிடைத்ததாகவும் மெர்சி மெட்டில்டா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்