சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க வந்த நபரின், சட்டையில் கைவிட்டு செல்போனை பறித்த 16 வயது வடமாநில சிறுவனை, அங்கிருந்த இளைஞர்கள் போலீஸிடம் பிடித்துக் கொடுத்தனர். அப்போது, சிறுவனின் கன்னத்தில் போலீசார் அறைந்துள்ளனர். சிறுவன் மீது யாரும் போலீசில் புகார் கொடுக்காத நிலையில், சிறுவனை போலீசார் அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.