பாமக கொறடா விவகாரம் - வெளியான புதிய தகவல்

Update: 2025-07-06 04:18 GMT

பாமகவுக்கு 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால், அந்த கட்சியின் கொறடா விவகாரத்தில் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினையால், கட்சியின் சட்டப்பேரவை கொறடாவாக இருந்த எம்எல்ஏ அருளை நீக்கி, எம்எல்ஏ சிவக்குமாரை கொறடாவாக அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். இதுகுறித்த மனுவை சபாநாயகரிடம் வழங்கப்பட்ட நிலையில், கொறடாவாக தொடர்வதாக ராமதாஸ் வழங்கிய கடித‌த்தை எம்எல்ஏ அருளும் வழங்கினார். இந்நிலையில், சட்டமன்ற கட்சியாக இருப்பதற்கு, குறைந்தபட்சம் 8 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான், கொறடா போன்ற பதவிகளை அங்கீகரிக்க முடியும் என்றும் சட்டப்பேரவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாமகவுக்கு 5 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால், கொறடா என்ற ஒரு பதவி அக்கட்சிக்கு கிடையாது என்றும், இந்த விவகாரத்தில், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்