மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் தமிழகத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ
PM Modi | மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் தமிழகத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ
ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் - முன்னேற்பாடுகள் தீவிரம்
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ஆம் தேதி மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக, கங்கைகொண்ட சோழபுரம் வந்து ரோடு ஷோ நடத்த உள்ளார்.
இளையராஜாவின் திருவாசகம் இசை நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்பதாகவும், மாமன்னர் இராஜேந்திர சோழனின் நாணயத்தையும் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.