திண்டுக்கல்லில் ரேஷன் கார்டுகளை அடமானமாக பெற்று பொருட்களை வாங்கிச் செல்லும் பெண் ஒருவரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பலர் தங்களது பண பிரச்சனைக்காக ஸ்மார்ட் ரேஷன் அட்டையை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட அட்டைகளை அடகு பெற்ற அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அட்டை உரிமையாளரை வரவழைத்து தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.