ஹாரன் ஒலிக்கு பதிலாக இனிமையான இசை! | விரைவில் புதிய சட்டம்

Update: 2025-04-22 15:31 GMT

புல்லாங்குழல், தபேலா மற்றும் ஹார்மோனியம் போன்ற இந்திய இசைக்கருவிகளைப் பிரதிபலிக்கும் வாகன ஹாரன்களை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இதனை கூறிய நிதின் கட்கரி, சாலை ஒலிகளை இனிமையாகவும், இதமாகவும் மாற்றும் நோக்கில், இந்த முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொள்வதாக விளக்கம் அளித்தார். இதற்காக சட்டம் இயற்ற தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்