"செடிகள் பேசுவதை புரிந்து கொள்ள முடியும்" - ஆய்வில் வெளிவந்த முக்கிய தகவல்
"செடிகள் பேசுவதை பூச்சிகளால் புரிந்து கொள்ள முடியும்" - ஆய்வில் தகவல்
தாவரங்களும், பூச்சிகளும் ஒலி மூலம் பேசிக்கொள்ள முடியும் என்பதற்கான ஆதாரங்களை இஸ்ரேலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ள அவர்கள் இதன் மூலம் இயற்கையில் ஒலி தொடர்பு குறித்த புரிதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். போதிய தண்ணீர் அற்ற தக்காளி செடியில் எங்கு தாம் முட்டையிடுவது என்பதை தக்காளி செடியிலிருந்து வெளிப்படும் துயர அல்ட்ராசோனிக் சிக்னல் மூலம் அந்துப்பூச்சியால் தீர்மானிக்க முடியும் என்று கூறும் அவர்கள், இதுகுறித்து ஆய்வு கட்டுரை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.