ஹீரோயின் ஆக வேண்டும் என்ற வெறியில் சுற்றிய கல்லூரி மாணவிக்கு பரிதாபம்

Update: 2025-08-24 15:54 GMT

ஹீரோயினாக மாற்றுவதாகக் கூறி மாணவியிடம் 24 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்துள்ளார்.. அவரை ஒரு கும்பல் தொடர்பு கொண்டு சினிமா மற்றும் தொலைக்காட்சியில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளது. இதனை நம்பிய அந்த மாணவி, 24 லட்சம் ரூபாயை அந்த கும்பல் கேட்டதும் கொடுத்துள்ளார்.. பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு அந்த கும்பல், மாணவிக்கு டிமிக்கி கொடுத்த நிலையில் இது குறித்து மாணவி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லக்னோவைச் சேர்ந்த தருண் சேகர் சர்மா, டெல்லியைச் சேர்ந்த ஆஷா சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்