ரத்த தான முகாமில் போட்டோசூட் - அதிமுக பெண் மா.செ. வீடியோ வைரல்

Update: 2025-05-12 08:48 GMT

ரத்ததானம் முகாமில் போட்டோ சூட் - அதிமுக பெண் நிர்வாகி வீடியோ வைரல்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடெங்கும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்க பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்டவையை நடத்தினர். இந்த சூழலில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன், ரத்த தானம் செய்வதைப் போல போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகர் பகுதியில் அதிமுக மாவட்ட ஐடி விங் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக, மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர். இதில், 70-க்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இதனிடையே, இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜெயசுதா லட்சுமிகாந்தன், ரத்ததானம் அளித்தது போல் கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் மட்டுமே எடுத்துக் கொண்டார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்