பசியால் வாடிய மலபார் அணிலுக்கு உணவளித்த புகைப்பட கலைஞர்கள் -கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடும் பசியால் அங்குமிங்கும் ஓடி திரிந்த மலபார் அணில் குட்டிக்கு, பூங்கா புகைப்பட கலைஞர்கள் பழங்களை வழங்கினர். தினந்தோறும் இங்குள்ள பழக் கடைகளுக்கு மலபார் அணில்கள் வந்து பழங்களை சாப்பிட்டு செல்வது வாடிக்கையாக உள்ள நிலையில், பகைப்பட கலைஞர்கள் கொடுத்த பழங்களை சாப்பிட்ட பிறகு மகிழ்ச்சியாக மரத்தில் ஏறி சென்ற மலபார் அணிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.