திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் வீசப்பட்டது தொடர்பாக நில அளவை பிரிவு அதிகாரிகள் போலீசார் விசாரணை நடத்தினர். வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வீசப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நில அளவை பிரிவு அதிகாரிகள் சரவணன் மற்றும் முத்துகுமார் ஆகிய இருவரிடமும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.