கோடை விழாவில் செல்லப்பிராணிகள் கண்காட்சி...!உற்சாகமாக கண்டுகளித்த மக்கள்

Update: 2025-05-26 02:25 GMT

ஏற்காட்டில், 48வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடந்த இந்த கண்காட்சியில், ஜெர்மன் ஷெப்பர்ட், லேப், பொமேரியன் உள்ளிட்ட 25 வகையான நாய்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின. அத்துடன் குதிரைகள் மற்றும் பறவைகளும் கண்காட்சியில் பங்கேற்றன.

அப்போது காவல்துறையில் உள்ள மோப்ப நாய்கள், தங்கள் எஜமானர்களுக்கு கட்டுப்பட்டு பொருட்களை

கண்டுபிடித்து அசத்தின. இதனை கூடியிருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டு களித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்