நெருங்கிய பொதுத் தேர்வு.. தி.மலையில் திரண்ட மாணவர்கள்

Update: 2025-02-25 02:52 GMT

வந்தவாசி அருகே பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், கல்வி எந்திரங்கள், பேனா உள்ளிட்ட பொருட்களை வைத்து மாணவர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, பூஜைகள் முடிந்து மாணவர்களுக்கு பூஜை

செய்யப்பட்ட பேனாக்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்