Perambalur | Food|"உங்க குழந்தைக்கு இத குடுப்பீங்களா.. என் Wife கர்ப்பமா இருக்கா.."-அலறவிட்ட கஸ்டமர்

Update: 2025-09-17 10:22 GMT

தனியார் உணவகத்தில் கெட்டுப்போன மீன் உணவு பரிமாறியதாக புகார்

பெரம்பலூரில் உள்ள தனியார் உணவகத்தில், பல நாள் பதப்படுத்தி கெட்டுப்போன மீனை வாடிக்கையாளருக்கு பரிமாறியதாக புகார் எழுந்துள்ளது.

பெரம்பலூர் நான்கு ரோடு செல்லும் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில், சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த வேலு என்பவர், தனது கர்ப்பிணி மனைவியுடன் உணவு அருந்தச் சென்றார்.

வஞ்சிரம் மீனை ஆர்டர் செய்தபோது, பல நாள் பதப்படுத்தப்பட்ட மீன் போல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்