பாலியல் வன்கொடுமை வழக்கு கிறிஸ்தவ போதகர் பஜேந்தர் சிங்குக்கு மொஹாலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
வெளிநாட்டுக்கு அனுப்பி உதவுவதாக கூறி தம்மை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போதகர் பஜேந்தர் சிங்குக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.