சென்னையில் மது போதையிலிருந்த இளம்பெண்ணை, தோழியின் நண்பர் சீரழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வேலூரை சேர்ந்த இளம்பெண்ணும், பெரம்பூரை சேர்ந்த இளம்பெண்ணும் தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண்ணின் ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, நுங்கம்பாக்கத்தில் ஹோட்டல் ரூமில் மது அருந்தியுள்ளனர். போதையில் உறங்கிய வேலூர் இளம்பெண் எழுந்து பார்த்துள்ளார். அப்போது தனது ஆடைகள் கலைந்து அருகில் தோழியின் ஆண் நண்பர் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார். பிறகு தோழியிடம் சண்டையிட்டு வெளியேறிய அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். விசாரனை நடத்திய போலீசார் பெரம்பூர் இளம்பெண் மற்றும் அவரது நண்பர் மானசே ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.