பார்க்கிங் பிரச்னை அரிவாளை கொண்டு மிரட்டல்

Update: 2025-08-04 02:47 GMT

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையில் அரிவாளை எடுத்து வந்து வெட்ட முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வால்மீகி தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முஜீப். இவர் அக்குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், முஜீப்பிற்கு ஒதுக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் ஜெயச்சந்திரன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஜெயச்சந்திரன் அரிவாளை எடுத்து வந்து மிரட்டலில் ஈடுபட்டார்.மேலும், முஜீப்பின் தாயை கடித்து வைத்த நிலையில், அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வீடியோ காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்