"பரந்தூர் - நிலங்களை ஒப்படைக்க முன்வந்ததாக மாயத்தோற்றம்"
நிலங்களை ஒப்படைக்க முன்வந்ததாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டித்து வரும் 13 ஆம் தேதி ஏகனாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூர் பகுதிகளில் மனைகளை வாங்கி போட்டு முதலீடு செய்துள்ளவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, விமான நிலைய திட்டத்திற்கு நிலங்களை வழங்கும் வகையில் பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் மூலம், விமான நிலைய திட்டத்திற்கு பரந்தூர் விவசாய மக்கள் நிலம் கொடுப்பதற்கு முன் வந்துவிட்டனர் எனும் மாய தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.