Palani Murugan Temple | பழனி கோயில் விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-08-28 08:54 GMT

கோயில் நிதியில் திருமண மண்டபம் - அரசாணை ரத்து

கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்ட தடை கோரிய வழக்கில், அறநிலையத் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ராம.ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிதியில் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நான்கரை கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் கட்டப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.

அறநிலையத் துறை விதிப்படி கோயில் நிதியை திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக பயன்படுத்த இயலாது என்று கூறிய ராம.ரவிக்குமார், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கோயில் நிதி உபரியாக இருந்தாலும், பொதுத் திட்டங்களுக்காகவோ, வணிக நோக்கங்களுக்காகவோ அதை பயன்படுத்த இயலாது என தெரிவித்தனர்.

மேலும், உபரி நிதியை பயன்படுத்தி திருமண மண்டபம் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்