"தொடரும் போராட்டம்... வரும் மிரட்டல்..." - குமுறும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்
பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை செயலாளரை பதவி நீக்கம் செய்து, கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் எனும் முழக்கத்தோடு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுவதாக கூறி, கல்லூரி வாயில் முன்பாக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் குவிந்து முழக்கமிட்டனர். மேலும் கேள்வி எழுப்பும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தாக்குவதாக கூறிய மாணவர்கள், அறக்கட்டளையின் கீழ் செயல்படும் 6 கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.