"தமிழகத்தில் வெளிமாநில வாக்காளர்கள் - நிச்சயம் பாதிப்பு"
லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள், தமிழக அரசியலில் வாக்காளர்களாக மாறுவதால், நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் "நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும், இருக்கும் என்று கூறினார்.