Ooty | 'ரெட் அலர்ட்' மழையை பொருட்டாக மதிக்காமல் ஊட்டியில் குவிந்த டூரிஸ்ட்

Update: 2025-06-16 03:44 GMT

உதகையில் பெய்து வரும் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அரசு தாவரவியல் பூங்காவிற்கு சென்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியான காலநிலையில் , கண்ணாடி மாளிகை, மலர் மாடங்கள் மற்றும் பூங்காவில் உள்ள பலவண்ண மலர்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். ஞாயிறன்று

நீலகிரி மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் வழங்கும் முறையான நெறிமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்