பிஎட் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவை, உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன், டிஎன்பிஎஸ்சி மூலம் உயர்கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்
இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட்., படிப்பிற்கு
இந்த ஆண்டு முதல் இணையவழி கலந்தாய்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.