விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தத்தில் `சிங்கிள் டீ’ ரூ.2 மட்டுமே
விஜயகாந்த் பிறந்த நாள் - 2 ரூபாய்க்கு டீ விற்பனை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு ரூபாய்க்கு டீ விற்பனை செய்யும் டீக்கடைக்காரரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. சித்தூர் கேட் பகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு நாள் முழுவதும் இரண்டு ரூபாய்க்கு டீ விற்பனை செய்யப்படுவதாக கடை உரிமையாளர் அன்பு அறிவித்தார். இதனால் ஏராளமான பொதுமக்கள் டீ வாங்கி மகிழ்ச்சியுடன் சென்றனர். குடியாத்தம் மருமகன் விஜயகாந்த்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக 2 ரூபாய்க்கு டீ விற்பனை செய்வதாக கூறி அன்பு நெகிழ்ந்தார்.