Route Thala Issue| காலேஜ் முதல் நாளிலே ஏழரை - போலீசிடம் சிக்கியதும் `டம்மி’ தலைகளான`ரூட்டு தலைகள்’
சென்னையில் கல்லூரி தொடங்கிய முதல்நாளில் எழுந்த ரூட்டு தல பிரச்சனை
கல்லூரி திறக்கப்பட்ட நாளிலேயே, சென்னையில் ரூட்டு தல பிரச்சனை எழுந்தது. பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கிண்டி நோக்கி சென்ற மாநகர பேருந்தில் மாணவர்கள், ரூட்டுதல விவகாரத்தில் ஈடுபட்டனர். பேருந்து முகப்பில் வாசகங்கள் அடங்கிய பேனரை ஒட்டி அதற்கு மாலை அணிவித்து ரகளை செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், நந்தனம் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர் என 9 பேர், ரூட்டு தல விவகாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்காக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ரூட்டு தல விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் திருவள்ளூர் மற்றும் அரக்கோணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.